இந்த நிலையில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (ஓய்வு) மில்டன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா, கருங்குழி, வள்ளுவப்பாக்கம் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.