செய்திகள்

முகிலன்குடியிருப்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம்

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பில், எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பில், எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

இதனையொட்டி முகிலன் குடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் காலை 10 மணிக்கு பூஜையும், தொடர்ந்து 12 மணிக்கு கஞ்சி கலச ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

நாகர்கோவில் முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தேங்காய்காரன் குடியிருப்பு வழியாக பகல் ஒரு மணி அளவில் எட்டுக்கூட்டு தேரிவிளையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற சக்தி பீடத்தை அடைந்தது. அங்கு பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முகிலன் குடியிருப்பு ஊர் செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் கிருஷ்ண கோபால், செல்ல சிவலிங்கம், முன்னாள் ஊர் தலைவர் தாணுமாலய பெருமாள், ராஜகோபால் மற்றும் ஊர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்