அங்காரா,
சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டுக்கு சொந்தமான 2 சுகோய் ரக போர் விமானங்களை நேற்று துருக்கி சுட்டு வீழ்த்தியது. துருக்கி விமானப்படையைச் சேர்ந்த எப்-16 போர் விமானங்கள் எல்லையை தாண்டி சிரியா பகுதிக்குள் நுழைந்து, 2 சுகோய் ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.