செய்திகள்

துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம்; சிரியா, லிபியா விவகாரங்கள் குறித்து மன்னருடன் ஆலோசனை

துருக்கி அதிபர் எர்டோகன் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

தோகா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் நேற்று முன்தினம் கத்தார் நாட்டுக்கு சென்றார். கொரோனா பரவத் தொடங்கியதற்குப் பின் அவர் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இதுவாகும்.

தலைநகர் தோகாவில் விமானம் மூலம் வந்திறங்கிய எர்டோகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மன்னரின் மாளிகைக்குச் சென்று அந்த நாட்டின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியா சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் அமைதி நிலை நாட்டுவதற்கான முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து