செய்திகள்

பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 28-09-2014 அன்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் சென்ற போது, புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் அய்யப்பராஜ் (வயது 25), சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் டிரைவர் முருகன் காயம் அடைந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பராஜ், லட்சுமணன் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது