செய்திகள்

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தினத்தந்தி

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் பாதையான உப்பாற்று ஓடையில் கருவேல மரங்களும், தனியார் ஆக்கிரமிப்புகளும் நிறைந்து உள்ளன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் உப்பாற்று ஓடையின் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உப்பாற்று ஓடையை அளவீடு செய்து வருகின்றனர்.

மேலும் ஓடையில் எந்தெந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன? என்பதையும் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு, மழைக்காலத்துக்கு முன்பாக ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை