செய்திகள்

விழுப்புரத்தில், லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது - கார், ரூ.55 ஆயிரம் பறிமுதல்

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் காரில் இருந்தபடியே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே வீரன் கோவில் எதிரே காரில் 2 பேர் அமர்ந்து கொண்டிருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து காரை சோதனை செய்ததில் லாட்டரி சீட்டுகளும் மற்றும் அதனை விற்ற பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும், விழுப்புரம் கே.கே.சாலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த முபாரக்அலி (வயது 34), விழுப்புரம் தந்தை பெரியார் நகர் கோவிந்தராஜ் கார்டன் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (28) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து விழுப்புரம் பகுதியில் பல மாதங்களாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந் தது. இதையடுத்து முபாரக்அலி, கவுரிசங்கர் ஆகிய இருவரை யும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.55 ஆயி ரத்து 140, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்