செய்திகள்

நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது

நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

குழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆமதாபாத் அருகே சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் பெண் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்ததையடுத்து ஆசிரமம் மற்றும் மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆமதாபாத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள ஹிராபூர் கிராமத்தில் உள்ள யோகினி சர்வஜனபீடம் ஆசிரமத்தின் மேலாளர்கள் மா பிரன்பிரியா மற்றும் மா பிரியாதத்வா ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக ஆமதாபாத் போலீசார் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு கடத்தல் (364) சிறை வைத்தல் (344) காயம் ஏற்படுத்துதல் (323) வேண்டும் என்றே அவமதிப்பது (504) மிரட்டல் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை