செய்திகள்

பொறுமையை கடைப்பிடியுங்கள் இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை

பொறுமையை கடைப்பிடியுங்கள் என இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரையை வழங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370ஐ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா.வில் முறையிடப்போவதாக கூறியுள்ளது.

இந்நிலையில் பொறுமையை கடைப்பிடியுங்கள் என இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரையை வழங்கியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு பற்றி அவருடைய செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் பேசுகையில், ஐ.நா. பொதுச்செயலாளர், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கவலையுடன் பார்த்து வருகிறார். அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால்தான் அவர் சமரசம் செய்து வைப்பார் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு