செய்திகள்

மதுராந்தகத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஹாஸ்பிடல் சாலை பிரபல துணிக்கடை எதிரில் காக்கி கலர் சட்டை அணிந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் தாடி வைத்திருந்தார். இதுகுறித்து மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மதுராந்தகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ்க்கு தகவல் தெரிவித்தார். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.