புதுடெல்லி,
ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் விமான சேவையை தொடங்குவது எப்போது? என்ற கேள்விக்கு டெல்லியில் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
அப்போது அவர், உலக நாடுகள் சர்வதேச விமான சேவையை தொடங்கினால் இந்தியாவும் தொடங்கும். வந்தே பாரத் திட்டம் 3வது மற்றும் 4வது கட்ட திட்டத்தின் மூலம் 300 விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டம் மூலம் 1,09,203 விமானப் பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். உதான் திட்டத்தின் மூலம் 588 விமானங்கள் மூலம் 1928 டன் மருத்துவப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.