செய்திகள்

உத்தர பிரதேச தொழிற்சாலை வெடிவிபத்தில் பலியான 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

உத்தர பிரதேசத்தில் மெழுகுவர்த்தி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் மோதி நகரில் மெழுகுவர்த்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்கள். 16 வயது நிரம்பிய சிறுவனும் பலியாகி உள்ளான். இதுதவிர்த்து 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், காஜியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளார்.

உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அரசு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...