செய்திகள்

வானவில்: மெர்சிடஸ் பென்ஸ் வி-கிளாஸ் எலைட்

சொகுசு கார்கள் சந்தையில் கணிசமான இடத்தைப் பிடித்துள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது ‘வி-கிளாஸ் எலைட்’ மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னையில் பென்ஸ் நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு புதிய மாடல் அறிமுகத்தை சென்னையில் நடத்தியது இந்நிறுவனம். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.10 கோடியாகும். வி-கிளாஸ் மாடலின் மேம்படுத்தப்பட்ட ரகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் இரண்டாவது வரிசை இருக்கைகள் ரெக்லைனர் பிரிவைச் சேர்ந்தவை. இதனால் காரில் சாய்வாக அமர்ந்தபடியே ஓய்வெடுக்கலாம். இது முழுக்க முழுக்க மின்சாரத்தில் செயல்படுவதாகும். இதன் முன்புற பம்பர், எல்.இ.டி. முகப்பு விளக்கு, புதிய வடிவிலான கிரில் ஆகியன இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. ஸ்டீல் புளூ, செலன்டைன் கிரே, கிராபைட் கிரே டார்க், அப்சிடியன் பிளாக் மெடாலிக், கேவன்ஸைட் புளூ மெட்டாலிக், ராக் கிரிஸ்டல் வொயிட் மெட்டாலிக், பிரில்லியண்ட் சில்வர் மெட்டாலிக் என 7 நிறங்களில் இது கிடைக்கும். இதில் 17 அங்குலம் மற்றும் 18 அங்குல சக்கரங்களைக் கொண்ட காரும் உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் விருப்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

உ ள்பகுதியில் அறையின் குளிர் தன்மையை கட்டுப்படுத்தும் வசதி, பொழுது போக்கு அம்சத்துக்கென பெரிய தொடு திரை உள்ளது. இதில் இனிய இசையை வழங்க 15 ஸ்பீக்கர்கள் உள்ளன. 360 டிகிரி கோணத்தில் உதவும் பார்க்கிங் அசிஸ்ட், பின்புற ஜன்னல் திறந்து மூடும் வகையிலானது. சன்ரூப் வசதி தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உட்பட அனைவரையும் காக்கும் வகையில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. இதில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் உள்ளது. டீசலில் இயங்கும் இந்தக் கார் 163 ஹெச்.பி. திறனையும், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 9 கியர்கள் உள்ளன. இதில் 11 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிட முடியும். இந்த மாடல் டொயோடா வெல்பயர் எம்.பி.வி. காருக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்