செய்திகள்

வானவில் : லகூன் ஹெட்போன்

ஆடியோ சாதன தயாரிப்பில் முன்னணியில் உள்ள பேயர்டைனமிக் நிறுவனம் அதி நவீன ஹெட்போன், வயர்லெஸ் ஏர் பட்ஸ் மற்றும் ராக்கர் தண்டர் பிளஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

வயர்லெஸ் ஹெட்போன் சாதனம் சுற்றுப்புற சத்தங்களை முற்றிலுமாக தவிர்த்து இனிய இசையைக் கேட்க உதவுகிறது. இதன் விலை ரூ.29,990 ஆகும். எம்.ஐ.ஒய். ஆப்-செயலி, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். செயலியில் செயல்படும். புளூடூத் 4.2 இணைப்பு 10 மீட்டர் சுற்றளவில் செயல்படும். இதில் 46 மணி நேரம் பேட்டரி பேக் அப் வசதி கொண்டது. அதேபோல தொடர்ந்து 24 மணி நேரம் செயல்படும். 3.5 ஹெட்போன் ஜாக் வசதி உள்ளது.

இந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு ஜூக் இஸட்.பி. ராக்கர் தண்டர் பிளஸ் போர்டபிள் ஸ்பீக்கராகும். இதன் விலை ரூ.4,180 ஆகும். இதில் டி.ஜே. லைட்ஸ் இசைக்கேற்ப ஒளிரும். இது 40 வாட் இசையை வெளிப்படுத்தக்கூடியது. பல வண்ண ஒளி விளக்குகளை வெளிப்படுத்தும். இதில் வயர்லெஸ் மைக் மற்றும் எப்.எம். ரிசீவர் உள்ளது.

இது ஆப்பிள் ஐபோன், ஐபாட் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளில் இணைந்து செயல்படக் கூடியது. இது தவிர பிற மின்னணு எலெக்ட்ரானிக் சாதனங்களிலும் இதை இணைக்க முடியும். இதில் யு.எஸ்.பி. போர்ட், டி.எப். கார்டு போடும் வசதி இருப்பதால் எம்.பி 3 இசை ஆல்பங்களை இதில் கேட்க முடியும். இதில் ரீசார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் இது நான்கு மணி நேரம் தொடர்ந்து செயல்படும். எளிமையாக செயல்படுத்த ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

சவுண்ட் ஒன் எக்ஸ் 6 இயர்பட்ஸ் ரூ.7,990. அறிமுக சலுகை விலை குறிப்பிட்ட கால வரைக்குள் ரூ.2,750 ஆகும். இது ஸ்லீக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் இன்பில்ட் மைக் உள்ளது. இது கூகுள் அசிஸ்ட் மூலம் செயல்படுத்தலாம். இதை சார்ஜ் செய்வதற்கான தனி பெட்டி(கேஸ்) 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் இது சிறப்பாக செயல்படும். இதை தற்காலிக பவர் பேங்காகவும் பயன்படுத்தமுடியும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் செயல்படும். இது 10 மீட்டர் தூரத்திலும் செயல்படும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு