செய்திகள்

சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த விழுப்புரம் சிறுமி கற்பழிப்பு; பானிபூரி வியாபாரி ‘போக்சோ’ சட்டத்தில் கைது

தாயாரிடம் கோபித்துக்கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த விழுப்புரம் மாவட்ட சிறுமியை கற்பழித்த பானிபூரி வியாபாரி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

16 வயது சிறுமி

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென்று வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரை அவரது தாயார் மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு மாற்றம்

போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அன்று தாயாரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை வீட்டு வெளியேறி சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றதும், அப்போது அவரை அங்கு பானிபூரி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று கற்பழித்ததும் தெரிய வந்தது. சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

கைது

இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை கர்ப்பமாக்கியது பானிபூரி வியாபாரியான சென்னையை அடுத்த திரிசூலம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்