வானிலை செய்திகள்

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் கடலூர் வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.