வானிலை செய்திகள்

தமிழகத்தின் 13 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை யை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை யை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள் விபரம் பின்வருமாறு;

கரூர் - 104 டிகிரி பாரன்ஹீட்

அரியலூர் - 104 டிகிரி பாரன்ஹீட்

வேலூர் - 103 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு - 102 டிகிரி பாரன்ஹீட்

மதுரை விமான நிலையம் - 101

திருச்சி - 100 டிகிரி பாரன்ஹீட்

நாமக்கல் - 100 டிகிரி பாரன்ஹீட்

தருமபுரி - 100 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 100 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை - 100 டிகிரி பாரன்ஹீட்

சென்னை மீனம்பாக்கம் - 100 டிகிரி பாரன்ஹீட்

திருப்பத்தூர் - - 100 டிகிரி பாரன்ஹீட்