வானிலை செய்திகள்

18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

காற்றழுத்த தாழ்வுப்பாதை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், தென்காசி, திருச்சிராப்பள்ளி கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.