கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுமார் 0.9 கிமீ உயரத்தில் விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, வேலூர், சேலம், நாமக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.