சென்னை,
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தென்காசி, கோவை, நீலகிரி, பெரம்பலூர் சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.