வானிலை செய்திகள்

டித்வா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் டித்வா புயல் உருவாகியுள்ளது

தினத்தந்தி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து தெற்கில் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டித்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், டித்வா புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலால் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை