வானிலை செய்திகள்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியிருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி வெயில் பதிவானது.

வேலூர்- 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கரூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

ஈரோடு - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

நாமக்கல் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

மதுரை நகரம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

திருத்தணி - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

சேலம் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

திருச்சி - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்)