வானிலை செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுதினம் வரை வறண்ட வானிலையே நிலவும்; வானிலை ஆய்வு மையம்

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்

சென்னை,

தமிழகத்தில் நாளை மறுதினம் வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுதினம் வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்.

குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்த்லிஉம் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முத்ல 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.