செய்திகள்

வங்கிஊழியர் வீட்டின் மாடியில், கள்ளநோட்டை போட்டு சென்ற எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கைது

திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டின் மாடியில் கள்ள நோட்டை போட்டுச்சென்ற எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

திருப்பூர்,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 31). கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே திருநீலகண்டர் வீதியில் பிரகாஷ் (40) என்பவருக்கு சொந்தமான வீட்டை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கி உள்ளார்.

அதன்பின்னர் பிரகாசின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரகாஷ் தனது குடும்பத்துடன் அந்த வீட்டிலேயே குடியிருந்தார். இந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு பிரகாசிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமநாதன் வலியுறுத்தினார். ஆனால் அவர் வீட்டை காலி செய்ய மறுத்ததோடு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ராமநாதன் ரூ.3 லட்சம் பிரகாசுக்கு கொடுத்துள்ளார். அதன்பின்னரே பிரகாஷ் வீட்டை காலி செய்துள்ளார். அப்போது ராமநாதனை எப்படியும் பழிவாங்குவேன் என்று பிரகாஷ் கூறிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியை பராமரிக்க ராமநாதன் சென்றுள்ளார். அப்போது மாடியில் திறந்த நிலையில் கிடந்த பெயிண்ட் டப்பாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருமுருகன் பூண்டி போலீசாருக்கு, ராமநாதன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று டப்பாவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்-90, 500 ரூபாய் நோட்டுகள்-20 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள்-96 -ஐ கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் (கலர் ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுக்கப்பட்டவை) என்று தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரகாசை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டை காலி செய்யும்போது பிரகாஷ் கேட்ட ரூ.5 லட்சத்தை ராமநாதன் கொடுக்கவில்லை.

இதனால் ராமநாதனை பழிவாங்கும் நோக்கில் வீட்டை காலி செய்யும் போது பெயிண்ட் டப்பாவில் கள்ளநோட்டு களை வைத்து அந்த டப்பாவை வீட்டின் மாடியில் பிரகாஷ் வைத்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீட்டை காலி செய்த பிறகு அவ்வப்போது மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரகாஷ், சம்பந்தப்பட்ட வீட்டின் மாடியில் கள்ளநோட்டுகள் இருப்பதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள் ளார்.

இதையடுத்து பிரகாசை கைது செய்த போலீசார், அவர் வைத்து இருந்த கலர் ஜெராக்ஸ் மிஷினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரகாஷ், திருமுருகன் பூண்டியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை