கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்து உள்ளது.
அதன்படி, தின்ஹடா தொகுதியில் உதயன் குஹா, சாந்திப்பூர் தொகுதியில் பிராஜ் கிஷோர் கோஸ்வாமி, கர்தஹா தொகுதியில் சோபன்தேவ் சட்டோபாத்யாய் மற்றும் கொசாபா தொகுதியில் சுப்ரதா மொண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.