செய்திகள்

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து திரும்பிய 7 பேர் எங்கே?

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து திரும்பிய 7 பேர் எங்கே என போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

லூதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து 7 பேர் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் முகவரிகளை வாங்கிவிட்டு அதிகாரிகள் அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் கொடுத்த முகவரியில் வீட்டுக்கு சென்று சோதனை செய்ய சென்ற மருத்துவர்களுக்கு அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமிர்தசரஸ் மற்றும் மொகாலி சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 12-ந்தேதி வரை 85 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது கண்டறியபட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்