புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல்மந்திரிகளை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 6ந் தேதியில் இருந்து, 3 முன்னாள் முதல்மந்திரிகளுக்கும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? 2 பேர் தனிமை சிறையிலும், ஒருவர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய அரசியல் தலைவர்களை ஏன் அடைத்து வைக்கிறீர்கள்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.