செய்திகள்

டெல்லி அருகே பண்ணை வீட்டில் மது விருந்து; பெண்கள் உள்பட 200 பேர் கைது

டெல்லி அருகே பண்ணை வீட்டில் மது விருந்து நடத்திய விவகாரத்தில், பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நொய்டா,

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு பண்ணை வீட்டில் நேற்று இரவு ஆண்கள், பெண்கள் பங்கேற்ற மது விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நொய்டா உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் படையுடன் அந்த பண்ணை வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு போதையில் நடனமாடிக்கொண்டிருந்த 161 ஆண்கள், 31 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. நொய்டாவை சேர்ந்த சிலரும் இதில் சிக்கினர்.

பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அங்கு வைக்கப்பட்டு இருந்த போதைப்பொருட்கள், பீர் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது