சென்னை,
சென்னை ராயப்பேட்டை பைலட் சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா(வயது 27). இவர்களுக்கு திருமணமாகி நிகிதா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் லதா 2-வது முறையாக கருவுற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்தது.
இதனால் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப் போது அவருக்கு கரு கலைந்து விட்டது. இதையடுத்து சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தார். சிகிச்சை முடிந்து வந்த பிறகும் அவருக்கு ரத்த போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. லதாவின் கணவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லதாவும், அவரது ஒரு வயது குழந்தை நிகிதாவும் மட்டும் இருந்தனர்.