செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல்

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கும் என்று துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக கடந்த 31 ஆம் தேதி கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்றுக்கொண்டார். சிறப்பு அந்தஸ்து ரத்தால் பதற்றம் நிலவி வந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு அங்கு பேசியதாவது:- ஜம்மு காஷ்மீர் சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகும். எனவே, இங்கு விரைவில் தேர்தலுக்கான பணிகள் துவங்கும். இங்கு தொடர்ந்து துணை நிலை ஆளுநர் ஆட்சி நீடிக்காது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நமது யூனியன் பிரதேசத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள காவல்துறை தயாராக வேண்டும். தேர்தலின் போது காவல்துறையினர் பணி மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை