நியூயார்க்,
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். காந்தி பிறந்தநாளையொட்டி அவர் சார்பில் ஐ.நா. ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.
அதில், நெடிய மோதல்கள் மற்றும் சிக்கலான சவால்கள் நிறைந்துள்ள இந்த நேரத்தில் காந்தியின் கொள்கையான அகிம்சையே உத்வேகம் அளிப்பதாக உள்ளது. வன்முறை இல்லாத உலகம் அகிம்சையின் மூலமே வேறுபாடுகளுக்கான தீர்வு இதுவே நமது முக்கிய பணியாக இருக்க வேண்டும். இந்த நீடித்த தொலைநோக்கு மற்றும் கொள்கையை உலகம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.