உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் - ஐ.நா. தகவல்

உக்ரைனில் இருந்து ஒரு வாரத்தில் 10 லட்சம் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் பிரிவின் கமிஷனர் பிலிப்போ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு வாரம் ஆகியுள்ளது. இந்தப் போரினால் அந்த நாடு நிலைகுலைந்து வருகிறது. தங்கள் உயிரைக்காத்துக்கொள்வதற்காக அப்பாவி மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி ஐ.நா. அகதிகள் பிரிவின் கமிஷனர் பிலிப்போ கிராண்டி நேற்று கூறும்போது, 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளதை நாங்கள் கண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார்.

மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் அகதிகளாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது