உலக செய்திகள்

பாகிஸ்தானில் 1000 வருட பழமையான இந்து கோவில் விரைவில் மீண்டும் திறப்பு

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருட பழமையான இந்து கோவில் விரைவில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருட பழமையான இந்து கோவில் மீண்டும் திறக்கப்படுகிறது. கோவிலின் பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மேற்பார்வையின் கீழ் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோவில் திறக்கப்படவுள்ளது.

இந்த கோவில் தாரோவாலில் உள்ள ஷவாலா தேஜா சிங் கோவில் ஆகும். இது சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. பின்பு பிரிவினையின் போது மூடப்பட்டது. பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் போது நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது. அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளது.

அப்பகுதியில் வாழும் இந்துக்கள் பாகிஸ்தான் அரசிற்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். மக்கள் எந்நேரமும் இக்கோவிலுக்கு வரலாம் என துணை ஆணையர் பிலால் ஹைதர் தெரிவித்தார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்