image tweeted by @GWR 
உலக செய்திகள்

100 வயது முதியவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை

பிரேசிலில் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 100 வயது முதியவர் கின்னஸ் சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

புருஸ்க்யூ,

தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தெடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார் இவர்.

நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது பேல, ஆரேக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை