உலக செய்திகள்

ஹைதியில் வீடுகளுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - 12 பேர் பலி

ஹைதியில் உள்ள கேபரெட் நகரத்தில் மர்ம கும்பல் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்கு வந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஹைதி,

கரீபியன் நாடான ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அவ்வப்பேது அமைதியை குலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் அங்குள்ள சிறிய நகரமான கேபரெட் என்ற இடத்தில் ஒரு கும்பல் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்கு வந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஈவு, இரக்கம் இல்லாமல் அவர்கள் அங்குள்ள 20 வீடுகளுக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் அந்த வீடுகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 12 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு