உலக செய்திகள்

இலங்கையில் பேருந்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் காயம்

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், ராணுவத்தினர் உள்பட 19 பேர் காயமடைந்தனர். #Tamilnews

கொழும்பு,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மாகாணம், தியாதளவாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி நேற்று காலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றது. கஹகோல்லா பகுதியில் அந்த பேருந்து வந்தபோது, அது திடீரென வெடித்து சிதறியது.

இதில் அந்த பேருந்து பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள், பொது மக்கள் 7 பேர் ஆகிய 19 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாத தொடர்பு இல்லை என்று மறுப்பதற்கில்லை. பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்ததாலும், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தபிறகுதான், அதற்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.