உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக்கொலை; தலிபான்கள் வெறிச்செயல்

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த முன்னாள் வீரர்கள் உட்பட 13 பேரை தலிபான் அமைப்பினர் சுட்டு கொன்றுள்ளனர்.

காபூல்,

ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அடுத்த சில நாட்களில் டேகாண்டி மாகாணம் கஹோர் கிராமத்தில் தலிபான் படையினர் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 34 வீரர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு தலிபான்களிடம் சரண் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 30ந்தேதி தலிபான் படையை சேர்ந்த 300 பேர் கஹோர் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அச்சத்தில் வெளியேற முயற்சித்து உள்ளனர்.

அவர்களை நோக்கி தலிபான்கள் சுட்டதில் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டு முன்னாள் வீரர் ஒருவர் திருப்பி சுட்டதில் தலிபான் அமைப்பினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தலிபான்கள், சரண் அடைந்த முன்னாள் வீரர்கள் 9 பேரை அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு இழுத்து சென்று சுட்டு கொன்று உள்ளனர். அவர்கள், சிறுபான்மையினரான ஹசாரா பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்