கந்தகி,
நேபாள நாட்டின் கந்தகி மாகாணத்தின் கோர்க்கா நகரில் பார்பக் என்ற கிராமத்தில் திடீரென ஒரே வாரத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 3 கொரோனா நோயாளிகளும் அடங்குவர்.
இதுபற்றி மாகாண சுகாதார இயக்குனரக இயக்குனர் டாக்டர் பிந்து சர்மா கூறும்பொழுது, தகவல் அறிந்து பார்பக் கிராமத்திற்கு மருந்து மற்றும் தேவையான உபகரணங்களுடன் மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் ஆய்வை நிறைவு செய்து வந்தபின்னர் மர்ம மரணம் பற்றிய விவரங்கள் தெரிய வரும் என கூறியுள்ளார். நேபாளத்தில் 5.49 லட்சம் பேருக்கு நேற்று வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 7,047 பேர் உயிரிழந்து உள்ளனர்.