காத்மண்டு,
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வேலை வாங்கி தருகிறோம் என கூறி நேபாள நாட்டு இளம்பெண்களிடம் இடைத்தரகர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பி சில இளம்பெண்கள் அவர்களுடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூர் மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நேபாள இளம்பெண்கள் 13 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 17 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்கள் நேபாள நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். ஆண்டுதோறும் வேலை வாங்கி தருகிறோம் என்ற வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான நேபாள இளம்பெண்கள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.