கோப்புப்படம் 
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: 1.30 லட்சம் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் - உக்ரைன் அரசு

ரஷியாவின் போர் காரணமக 1.30 லட்சம் வெளிநாட்டினர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக நேற்று நீடித்தது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர். இந்த நிலையில் 10 ஆயிரம் இந்தியர்கள் உள்பட 1 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற உதவியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனை விட்டு பாதுகாப்பாகவும், விரைவாகவும் வெளியேற வெளிநாட்டு குடிமக்களை ஆதரிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டினரை மோதல் பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் அதிக முனைப்புடன் இருக்குமாறும், உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்துடன் வழக்கமான தொடர்பைப் பேணுமாறும் வலியுறுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது