Photo Credit: PTI/AP 
உலக செய்திகள்

போரில் ரஷிய வீரர்கள் 13,800-பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; உக்ரைன் சொல்கிறது

உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா, தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் முனைப்பில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தினத்தந்தி

கீவ்,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக அந்நாடு மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் 20 ஆம் தேதி இந்த தாக்குதலை ரஷிய படைகள் தொடங்கின. 21-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா, தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் முனைப்பில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்து வருகிறது. போரில் அப்பாவி பொதுமக்களும் பலியாகும் சோகம் அரங்கேறி வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கும் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் கடும் சவால் அளித்து வருகிறது. உக்ரைன் ராணுவத்தின் பதில் தாக்குதலால் ரஷிய வீரர்கள் இதுவரை 13,800- பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை