உலக செய்திகள்

வங்காளதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்த விசாரணையில் பயங்கரவாதிகள் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி வெடி குண்டு வைத்தது தெரியவந்தது.

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 14 பயங்கரவாதிகள் மீதான விசாரணை டாக்கா விரைவு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிந்தது.

இதில் பயங்கரவாதிகள் 14 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்கள் 14 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை