மெக்ஸிகோசிட்டி,
மெக்சிகோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியது. இந்த நிலநடுகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
கடந்த 1985 ஆம் ஆண்டு இதே நாள் மெக்ஸிகோவில் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பல உயிர்களை காவு வாங்கியது. அந்த சோக நிகழ்வின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் அதேநாளில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு மெக்ஸிகோ மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 90 பேர் பலியானது நினைவிருக்கலாம்.