உலக செய்திகள்

தென் கொரியாவில் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பேர் பலி

தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர். 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் காயமடைந்துள்ளனர். #Seoul

தினத்தந்தி

சியோல்,

தென் கொரியா நாட்டில் சியோல் நகரில் மிர்யாங் என்ற பகுதியில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவு அறை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது என்று மருத்துவமனையின் 2 செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

தீ விபத்து ஏற்பட்டபொழுது மருத்துவமனையில் 200 பேர் இருந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் காயமடைந்து உள்ளனர்.

தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே இறந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

#Seoul #hospital #fireaccident

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்