வாஷிங்டன்,
கிரேக் கோலே தனது தோழியையும், அவரது 4 வயது மகனையும் கொலை செய்ததாக கடந்த 1978ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
எனினும் கிரேக் கோலே, தான் குற்றமற்றவர் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், கவர்னரின் பரிந்துரையின் பேரில் அந்த வழக்கு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கிரேக் கோலேவுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அவருக்கும், கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது.
அதனை தொடர்ந்து 39 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது அவருக்கு வயது 79. இதற்கிடையே, நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்றமுடியாவிட்டாலும், அவருக்கு இழப்பீட்டு தொகையை அளிப்பதன் மூலம் இந்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி அவருக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 கோடி) இழப்பீடாக வழங்கப்பட்டது.