உலக செய்திகள்

சவுதியில் கடல் அலையில் விளையாடிய 15 வயது சிறுமி திடீர் மரணம்

சவுதியில் இந்திய சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேசம் ராம் நகரைச் சேர்ந்த பர்வேஷ் அலி கான் என்பவர், சவுதி அரேபியாவின் டமாம் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 30-ம் தேதி தனது மனைவி, மகள், மகனுடன் அல்-கோபார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, கடல் அலையில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த இவரது 15 வயது மகள் சாஹர் பர்வேஷ் திடீரென மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்ட தாகத் தெரிவித்தனர்.