உலக செய்திகள்

நேபாளத்தில் சாலை விபத்து; 16 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

காத்மண்டு,

நேபாள நாட்டில் ஆர்காகாஞ்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து 400 மீட்டர் ஆழ பள்ளத்திற்குள் விழுந்தது.

இதில் 16 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.