உலக செய்திகள்

"ஹிட்லர் மீசை" வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை

துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எர்டோகன் துருக்கி அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்கிழக்கு நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தன் வீட்டின் அருகில் ஒட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்து, அவமதிக்கும் விதமான வாசகங்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சியால் சிக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்