ஜோகன்னஸ்பர்க்,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மோசாம்பிக் நாட்டின் சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள மபுடோ நகரின் புறநகர் பகுதிகளில் நகரம் முழுவதும் சேரும் குப்பைகள் ஒன்றாக கொட்டி குவிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அங்கு கொட்டப்படும் குப்பைகள் சுமார் மூன்று மாடி கட்டிடத்தின் உயரம் அளவுக்கு குவிந்துள்ளன.
இந்த சூழலில், அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கூறிய குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்தது. இதில், அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது
இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு அதிகாரி கூறுகையில், குப்பை மேடு சரிந்து அருகாமையில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. மேலும் சில குடும்பங்கள் இதில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சுகிறோம் என்றார்.