உலக செய்திகள்

ஜப்பானில் கொடுமை: 2020ம் ஆண்டில் 17,500 ஞாபக மறதி நோயாளிகள் மாயம்

ஜப்பானில் கடந்த ஆண்டில் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 500 பேர் காணாமல் போய் உள்ளனர்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில் தேசிய காவல் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2020ம் ஆண்டில் ஞாபக மறதி எனப்படும் டெமன்சியா வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அல்லது பாதிப்படைந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 ஆயிரத்து 565 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது, அதற்கு முந்தின ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட 86 அதிகம் ஆகும். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் பெருமளவில் முதியவர்களாக உள்ளனர். அவர்களால் தங்களை சுற்றி உள்ளவர்களை கூட நினைவில் வைத்து கொள்ள முடிவதில்லை. இதில், வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் இந்த கொடுமைகளால் அவர்கள் பல துன்பங்களை சந்திக்கின்றனர்.

இதுபற்றி அரசு அதிகாரிகள் அளித்துள்ள தகவலில், இதுபோன்று காணாமல் போனவர்களில் 527 பேர் மரணமடைந்து உள்ளனர். சிலர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து, காணாமல் போனவர்களை உடனடியாக கண்டறியும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை